போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட கோத்தகிரி பொதுமக்கள்

Nilgiri News, Nilgiri News Today- வேலை வாங்கித் தருவதாக கூறி, மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோத்தகிரியில் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட மக்களால், பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-10 09:11 GMT

Nilgiri News, Nilgiri News Today- கோத்தகிரியில், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கிருஷ்ணாபுதூரை சேர்ந்த பொதுமக்கள், ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்து இருந்தனர். அந்த மனுவில், கிருஷ்ணாபுதூரை சேர்ந்த கண்மணி என்ற பெண், கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்ப்பதாக கூறினார். அதே பகுதியில் வசிக்கும் 5-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடம் மத்திய அரசு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் கடன் பெற்று தருவதாகவும், படித்த பெண்கள் இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாகவும் கூறி ஒவ்வொருவரிடமும் தலா ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை பணம் பெற்றார்.

இந்த வகையில் மட்டும் கண்மணி என்ற அந்த பெண், கடந்த 2018-ம் ஆண்டு முதல் 80-க்கும் மேற்பட்டோரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து விட்டு, திருப்பி தராமல் மோசடி செய்து உள்ளார். அவர் கூறியபடி யாருக்கும் கடனுதவி பெற்றுத் தரவில்லை. யாருக்கும் வேலை வாங்கித் தரவும் இல்லை. இதனால், அவரிடம் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்த பலரும், பலத்த ஏமாற்றமடைந்தனர்.

எனவே, பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி, மோசடி செய்த அவர் மீது நடவடிக்கை எடுத்து, எங்களின் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த மனு கோத்தகிரி போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, போலீசார் தரப்பில் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், கண்மணி நேற்று மதியம் வக்கீலுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருந்தார். தகவல் அறிந்ததும் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அப்போது பண மோசடியில் ஈடுபட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு போலீசார் முற்றுகையிட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். 

Tags:    

Similar News