நீலகிரியை கண்டெடுத்த ஜான் சல்லீவன் பிறந்ததின கொண்டாட்டம்
நீலகிரி மாவட்டத்தை அறிமுகப்படுத்திய ஜான் சல்லிவனின் 233வது பிறந்தநாள், அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஜான் சல்லிவனின் 233 வது பிறந்தநாள் விழா, அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவரது நினைவிடம் அமைந்துள்ள கோத்தகிரி கன்னேரிமுக்கு கிராமத்தில், அவரது சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி நிர்மலா தலைமையில் கிராம மக்கள், அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கடந்த 1817 ஆம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, 1819 ஆண்டு நடைபயணமாக வந்து கோத்தகிரி அருகேயுள்ள கன்னேரிமுக்கு என்ற இடத்தில் வீடு கட்டி, முதன்முதலாக தங்கியுள்ளார். இதையடுத்து 1822 ஆம் ஆண்டு உதகமண்டலத்திற்கு வந்து ஸ்டோன் ஹவுஸ் பகுதியில் வீடு கட்டி தங்கியதாக கூறப்படுகிறது.
நீலகிரியை, இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியதோடு ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் உருளை கிழங்கு உள்ளிட்ட பல்வேறு காய்கறி பயிர்களையும் ஜான் சல்லிவன் அறிமுகம் செய்துள்ளார் என்பது குறிப்ப்பிடதக்கது.