குன்னூர் வெலிங்டனில் எம்ஆர்சி-யில் காலாற்படை தினம்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ம் தேதி இந்திய ராணுவத்தின் சார்பில், காலாற்படை தினம் கொண்டாடப்படுகிறது.

Update: 2021-10-27 09:30 GMT

குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் 75வது ஆண்டு காலாற்படை தினம் கொண்டாடப்பட்டது.

கடந்த 1947ம் ஆண்டு, அக்டோபர் 27ம் தேதி முதல் காலாற்படையினர், ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் எதிரிகளுடன் போரிட்டு, எதிரிகளிடம் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கை மீட்டனர். இந்நாளில் மகாராஜா ஹரி சிங், ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் சேர்ந்தது தொடர்பாக கையெழுத்திட்டார்.

நமது காலாட்படையின் இந்த வீரச்செயலை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ம் தேதி இந்திய ராணுவத்தின் சார்பில், காலாற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக காலாட்படைக்கு முக்கிய பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பில், இன்று 75 வது காலாா்படை தினம் கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி, வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில், ராணுவ இசை முழங்க ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து, இவ்விழாவில் காலாட்படை தலைவா் லெப்டினென்ட் ஜெனரல் எம்.ஜே.எஸ், கலோன் எம் ஆா் சி காமண்டன்ட் ராஜேஷ்வர் சிங் மற்றும் ராணுவப் படை, விமான படை , கப்பல் படை அதிகாரிகள் ஆகியோர் போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து ராணுவ மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், ராணுவ உயர் அதிகாரிகள், முன்னாள் ராணுவ உயர் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு , உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News