கோத்தகிரியில் கணவன் மனைவி போக்சோவில் கைது

மாணவியை கடத்திய நபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி இருவரும் போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-12-18 11:00 GMT

கைது செய்யப்பட்ட கிருபா மற்றும் ஆசித்.

கோவை சூலூர் ஆரஞ்ச் அவென்யூ பகுதியை சேர்ந்த சதாசிவம் என்பவரது மகன் அக்ஷித், 22. இவர், அதே பகுதியில் ஜிம் பயிற்ச்சியாளராக உள்ளார். இவரது மனைவி கிருபா, 21 என்பவரிடம் கோவையை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 பயிலும் மாணவி கிருபாவின் வீட்டிற்கு சென்று 'டியூஷன்' படித்து வந்துள்ளார்.

அப்போது அந்தப் பள்ளி மாணவிக்கும் கிருபாவின் கணவர் அக்ஷித்துக்கும் இடையே, பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோத்தகிரியில் உள்ள அவர்களது உறவினர் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களது பாதுகாப்பில் விட்டுச் சென்றுள்ளனர்.

தகவல் அறிந்த அக்ஷித், கோத்தகிரிக்கு வந்து அந்த மாணவியை அழைத்து சென்று, கோவை சூலாரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருவரும் தங்கியுள்ளனர். மாணவி காணாததால் உறவினர்கள் கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்படி, கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்த நிலையில், சூலூரில் அக்ஷித்துடன் மாணவி இருந்தது தெரியவந்தது. இருவரையும் அழைத்து வந்த போலீசார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

ஊட்டி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்மணி விசாரணை செய்தார். மாணவியை கடத்திச்சென்று உறுதியானதை அடுத்து, அக்ஷித் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கிருபா இருவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Tags:    

Similar News