குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் உதிரி பாகங்களை மீட்கும் பணி

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் ஹெலிகாப்டரின் உதிரி பாகங்கள் உடைத்து எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.;

Update: 2021-12-12 13:07 GMT

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து ஹெலிகாப்டரின் உதிரி பாகங்கள் உடைத்து எடுக்கும் பணி.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து ஹெலிகாப்டரின் உதிரி பாகங்கள் உடைத்து எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 8ம் தேதி நடந்தஹெலிகாப்டர் விபத்து சம்பவம் நாடு முழுவதும் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் பயணித்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 12 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட இடத்தை ராணுவ கட்டுபாட்டில் கொண்டு வந்து அங்கு பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரியான ஏர் மார்ஷல் மான்வேந்தர் சிங் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் விமான படையினர் மற்றும் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் ராஜேஷ்வர் சிங் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழக காவல்துறை சார்பில் ஏடி எஸ்பி முத்துமாணிக்கம் தலைமையில் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் மீதமுள்ள பொருட்களை உடைத்து எடுத்து செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் விமான படையினர், ராணுவத்தினர் மற்றும் குன்னூர் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



Tags:    

Similar News