நீலகிரியில் கொட்டி தீர்த்த கன மழை: மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

இன்று காலை முதல் மழையின் தாக்கம் சற்று குறைந்து இருப்பதால் மாயார் ஆற்றில் தண்ணீர் சற்று குறைந்துள்ளது.;

Update: 2022-05-10 06:55 GMT

மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தெங்குமரஹாடா கிராமத்திற்கு மக்களை பரிசல் மூலம் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

நீலகிரியில் கொட்டி தீர்த்த கன மழையால் மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு. நேற்று மாலை வேலை சென்று மீண்டு தெங்குமரஹடா கிராமத்திற்கு வந்த மக்களை பரிசல் மூலம் ஆற்றை கடந்த பரபரப்பு காட்சி.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இடியுடன் கொட்டி தீர்த்த கனமழையால் மாயார் ஆற்றில் நேற்று இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பின்புறம் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள தெங்குமரஹாடா கிராமத்திற்கு செல்லும் பகுதியில் அமைந்துள்ள மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நேற்றிரவு வேலைக்கு சென்று மீண்டும் தெங்குமரஹாடா கிராமத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை பரிசல் மூலம் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். மாயார் ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் பரிசல் மூலம் மக்கள் பயணம் செய்த காட்சி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இன்று காலை முதல் மழையின் தாக்கம் சற்று குறைந்து இருப்பதால் மாயார் ஆற்றில் தண்ணீர் சற்று குறைந்துள்ளது.

Tags:    

Similar News