குன்னூரில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகள் குன்னூர் பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது.;
குன்னூர் அந்தோணியார் மேல்நிலை பள்ளியில், 11 வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது
தமிழ்நாட்டில், மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் 11 -ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கப்படாத நிலையில், மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், குன்னூர் அருகேயுள்ள புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் 2020 முதல் 2021 வரை 11 வகுப்பு படித்த 231 மாணவர்களில் முதற்கட்டமாக 187 மாணவர்களுக்கு, விலையில்லா மிதிவண்டி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வம் தலைமையில், மாணவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் மிதிவண்டி வழங்கப்பட்டது.
மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் மிதிவண்டி வாங்கி சென்றனர். இதில் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.