குன்னூரில் ஓட்டல்களில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை

Nilgiri News- நீலகிரி மாவட்டம் குன்னூரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குழு, திடீர் சோதனை நடத்தி, காலாவதியான மற்றும் கெட்டுப் போன உணவுகள், இறைச்சி வகைகளை பறிமுதல் செய்தது.

Update: 2023-09-23 15:25 GMT

Nilgiri News- ஓட்டல்களில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 

Nilgiri News, Nilgiri News Today- குன்னூர் நகராட்சி பகுதியில் இயங்கி வரும் ஓட்டல்கள், பாஸ்ட்புட் கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் தலைமையிலான குழு, குன்னூரில் உள்ள பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் பகுதி, பெட்போர்டு ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல், பாஸ்ட்புட் கடை, ஷவர்மா ஓட்டல் கடைகளில் ஆய்வு நடத்தினர். இதில் கலப்பட தேயிலை தூள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள், கெட்டுப் போன மீன், கோழி இறைச்சி, தடை செய்யபட்ட பாலிதீன் பைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு ரூ.2000 முதல் ரூ.5000 வரை அபராதம் விதித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான உணவு பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். இச்சம்பவம் குன்னூர் மக்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

அடிக்கடி ஆய்வு நடத்த மக்கள் கோரிக்கை

நீலகிரி மாவட்டம், தமிழகத்தில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு பிற மாவட்டங்களை சேர்ந்த மக்களும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். இதனால் ஓட்டல்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றன. ரோட்டோரங்களிலும் நிறைய சிற்றுண்டி உணவகங்கள் பகல், இரவு நேரங்களில் செயல்படுகின்றன. எனவே, பல ஓட்டல்கள், சிற்றுண்டி உணவகங்களில் தரமான, காலாவதி ஆகாத உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா, என்பதை அடிக்கடி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த முன்வர வேண்டும் என, பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News