குன்னூரில் கட்டிட உரிமையாளருக்கு அபராதம்
பொதுசொத்துக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் கட்டுமானப் பணி மேற்கொண்ட கட்டட உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மவுண்ட் ரோடு குடியிருப்புகளின் மத்தியில் 100 அடிக்கு கீழ் கட்டுமான பணிகளுக்காக மண் எடுக்கும் போது வடமாநில தொழிலாளர்கள் ராகுல் மற்றும் ரசீது ஆகிய இரண்டு தொழிலாளர்கள் மண் சரிவில் சிக்கி லேசான காயத்துடன் அரசு மருத்துவமனையில் கடந்த 29 ம் தேதி அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மண் தோண்டியதால் சில கட்டடங்கள் அந்தரத்தில் தொங்கும் சூழல் இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அந்தரத்தில் தொங்கும் வீடுகளில் குடியிருப்பவர்களை தற்போதைக்கு வேறு இடங்களுக்கு குடியேற வருவாய் துறையினர் அறிவுறுத்தினர்.
இந்த கட்டடப் பணிக்காக மண் எடுப்பதற்கும், ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தவும், கட்டடம் கட்டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் கட்டட உரிமையாளர் மீண்டும் கட்டுமானப் பணியினை தொடர்ந்து செய்து வந்தார். இதில் வியாழக்கிழமை அங்கிருந்த மின் கம்பம் ஒன்றும் மண் எடுத்ததால் அந்தரத்தில் தொங்கியது இதனைத் தொடர்ந்து. கட்டட உரிமையாளர் யோகேஷ் கண்ணனுக்கு 5லட்சம் அபராதம் விதித்து கோட்டாட்சியர் உத்தரவிட்டார். அந்தரத்தில் தொங்கும் மின்கம்பத்திற்கு ரூபாய் 46ஆயிரம் அபராதமும் யோகேஷ் கண்ணனிடம் வசூலிக்கப்பட்டதாக குன்னூர் துணை மின் பொறியாளர் ஜான்சன் தெரிவித்தார்.