குன்னூர்: மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் உலா
குன்னூர், மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் குட்டியுடன் யானை உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.;
நீலகிரி மாவட்டம், குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடந்த 5 நாட்களாக குட்டியுடன் 2 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளது. அவ்வப்போது உணவு, மற்றும் தண்ணீருக்காக சாலையை கடப்பதால், அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
காட்டேரி அருகே காட்டுயானைகள் அரசு தோட்டக்கலைப்பண்ணையை சேதப்படுத்திய நிலையில், இன்று பிரதான சாலையான மலைப்பாதையில், மரப்பாலம் அருகே பிரதான சாலையை வழிமறித்து காட்டுயானைகள் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், காட்டுயானைகளை சுமார் ஒரு மணி நேரம் போராடி, சாலையை விட்டு வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனால் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.