கோத்தகிரி சாலையில் உலா வரும் யானை; வாகன ஓட்டிகள் அச்சம்

பலாப்பழ சீசன் துவங்கியுள்ளதால் கோத்தகிரியிலிருந்து மேட்டுபாளையம் சாலையில் யானைகள் படையெடுப்பு

Update: 2021-06-30 12:57 GMT

மாதிரி படம்

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பகுதிகளான முள்ளூர்,மாமரம் எஸ்டேட், குஞ்சப்பனை ஆகிய பகுதிகளில் பலாப்பழம் விளைச்சல் துவங்கியுள்ளது. ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் பலாப்பழம் சீசன் என்பதால் சமவெளிப் பகுதியில் இருந்து உணவுகளைத் தேடி காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக மலைப் பகுதிக்கு வருவது வழக்கம்.

தற்போது கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான பலா பழ மரங்களில் பல பழங்கள் அதிக அளவில் காய்த்துள்ளன. இந்தப் பலாப்பழங்களை உண்ண யானைகள் படையெடுக்க துவங்கியுள்ளது.

இந்நிலையில் காட்டு யானைக் கூட்டம் தற்போது முள்ளூர், மாமரம் எஸ்டேட், குஞ்சப்பனை பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு பலாப்பழ மரங்களை தேடி தேயிலை தோட்டங்களில் உலா வருவதும், சாலையோரங்களில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. மேலும் அப்பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் அப்பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோரும், குடியிருப்பு பகுதியிலுள்  பொதுமக்களும்,வாகன ஓட்டிகளும் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

எனவே தேயிலை தோட்டங்களிலும், சாலைகளிலும் உலா வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News