நீலகிரியில் தகவல் தெரிவிக்காமல் யானையை புதைத்த வழக்கு: இருவர் கைது

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், தகவல் தெரிவிக்காமல் யானையை புதைத்த வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-26 14:00 GMT

பெண் யானை இறந்ததை மறைத்து புதைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள்.

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி வனசரகத்திற்க்கு உட்பட்ட மெட்டுக்கள் என்னும் பகுதியில் சுமார் 4 வருடங்களுக்கு முன்பு தனியார் விவசாய தோட்டத்தில் பெண் யானை ஒன்று, விவசாய தோட்டத்தித்தில்,   விதிகளை மீறி வைக்கப்பட்ட உயர் மின் தடுப்பு வேலியில் சிக்கி இறந்துள்ளது.

இறந்த யானையை யாருக்கும் தெரியாமல்,  அதே பகுதியில் சிலர் புதைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்  அடிப்படையில் வனத்துறையினர் 10 பேர் கொண்ட குழு அமைத்து உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதில் ஈஸ்வரன், காட்டுராஜா, நிதிஷ் குமார் ஆகியோர் ஈடுப்பட்டதை உறுதி செய்த வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்க்கொண்டனர். இவர்களில் நிதிஷ் குமார் இறந்தவிட்ட நிலையில், ஈஸ்வரன் மற்றும் காட்டுராஜா இருவரையும் விசாரித்தபோது , அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்; இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும்,   யானையை புதைத்த இடத்திற்கு,  கைது செய்யப்பட்டவர்களை அழைத்துச் சென்று, தோண்டி எடுக்க செய்தனர். அங்கு யானையின் எலும்பு உள்ளிட்ட சில தடயங்களை சேகரித்தனர். வனத்துறையினர் தெரிவிக்கையில், இறந்த யானையின் வயது மற்றும் மற்ற தகவல்கள் தடயவியல் ஆய்வகத்தில் இருந்து அறிக்கை பெறப்பட்ட பின் சமர்ப்பிக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News