கோத்தகிரியில் பேருந்தை சேதப்படுத்திய யானை - பீதியில் உறைந்த பயணிகள்

கோத்தகிரியில், அரசு பேருந்தை தாக்கிய காட்டு யானையால், ஓட்டுநர்கள், பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2021-10-20 02:15 GMT

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில், அண்மைக் காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. நேற்றிரவு பழனியில் இருந்து,  அரசு பேருந்து 16 பயணிகளுடன் கோத்தகிரிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது,  கீழ் தட்டபள்ளம் பகுதியில் யானை ஒன்று திடீரென பேருந்தை மறித்தது; அத்துடன், கண்ணாடியை தாக்கி உடைத்தது.

இதனால்,  பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்து இருக்கைகள் ஒளிந்து கொண்டனர். பின்னர், அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் யானை சென்றது. அதன்பின்னர், ஓட்டுநர் சர்வேஸ்வரன், நடத்துனர் வினோத் ஆகியோர் பயணிகளை பத்திரமாக கோத்தகிரிக்கு பகுதிக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து, போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும்,  வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News