நீலகிரியில் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு
நீலகிரியில் வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.;
நீலகிரி மாவட்ட தேர்தல் பார்வையாளர் கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் குன்னூர் நகராட்சி, உலிக்கல் பேரூராட்சி, அதிகரட்டி பேரூராட்சியில் வாக்கு எண்ணும் மையங்கள், பதற்றமான வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தார்.
சேலாஸ் சிறுமலர் ஆரம்பப்பள்ளியை வாக்கு எண்ணும் மையமாக மாற்றி தயார் செய்யும் பணிகளை ஆய்வு செய்தார். அதிகரட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான பதிவேடுகளை பார்வையிட்டார்.
அதன் பின்னர் வாக்கு எண்ணும் மையமான அதிகரட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.