குன்னூர் வெலிங்டனில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி துவக்கம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் போர்டில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2021-10-26 17:15 GMT

விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோண்மெண்ட் வாரியத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு குடியிருப்புகள் கட்டுவதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளது. இதன் அடிப்படையில் வீடுகள் கட்ட வேண்டும். ஆனால் குறிப்பிட்ட அளவுகளை விட கூடுதலாக விதிமீறி பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் புனே தலைமையிட ஆலோசனையுடன், வெலிங்டன் கண்டோன்மெண்ட் வாரிய முதண்மை நிர்வாக அலுவலர் பூஜாபலிச்சா தலைமையில் இந்த விதிமுறை மீறிய 126 கட்டிடங்கள் இடிக்கும் பணி துவங்கியது. முதலில் இன்று, லிங்கம்மாள் காலனி, பாய்ஸ் கம்பெனி, ஜெயந்திநகர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 16 வீடுகள் இடிக்கப்பட்டன. தொடர்ந்து அடுத்த கட்டமாக வரும் வாரங்களில் மற்ற கட்டிடங்களும் இடிக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News