குன்னூர் டான் டீ ஊழியர்களுக்கு கொரோனா

அலுலகம் மூடி சீல் வைக்கப்பட்டது;

Update: 2021-05-14 10:06 GMT

நீலகிரி மாவட்டம் குன்னூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேயிலை தோட்ட கழக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அலுவலகம் மூடப்பட்டது.

தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் நீலகிரி மாவட்டம் குன்னூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவருகிறது.

குன்னூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் 60-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த அலுவலகத்தில் பணிபுரியும் 6 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்டது.

Tags:    

Similar News