குன்னூர்-மேட்டுப்பாளையம் லாரி கவிழ்ந்து விபத்து; போக்குவரத்து கடும் பாதிப்பு

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ஜல்லி லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-08-29 15:02 GMT

கவிழ்ந்து கிடக்கும் லாரி.

நீலகிரி மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து கட்டுமான பணிகளுக்கு ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி பர்லியார் சோதனை சாவடி அருகே வரும்போது கட்டுபாட்டினை சாலையில் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதிர்ஷ்ட வசமாக டிப்பர் லாரி ஓட்டுனர் உயிர் தப்பினார். இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து முடங்கியது.

சாலையின் இருபுறமும் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவு வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை குறைக்க தற்காலிகமாக ஒரு வழி பாதையாக மாற்றம் செய்தனர்.

பின்னர் ஜேசிபி உதவியுடன் சாலையின் நடுவே கிடந்த லாரியை ஓரமாக தள்ளி வைத்தனர். பின்னர் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தால் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அத்யாவசிய பொருட்கள் மற்றும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட காய்கறிகள் சரியான நேரத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் அதிக பாரம் ஏற்றி வரும் டிப்பர் லாரிகளால் இது போன்ற அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Tags:    

Similar News