குன்னூரில் தாய்பால் வார விழா உறுதிமொழி நிகழ்ச்சி

குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக வழங்க வேண்டிய சீம்பால் குறித்து போஷன் அபியான் திட்டம் சார்பாக எடுத்துரைக்கப்பட்டது.

Update: 2021-08-04 14:15 GMT

உறுதிமொழி எடுத்த்துக் கொண்ட தாய்மார்கள்.

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு குன்னூரில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பாக தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் ஊட்டுதலின் முக்கியத்துவம், குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக வழங்கப்படவேண்டிய சீம்பால் பற்றி போஷன் அபியான் திட்டம் சார்பாக எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில் கலந்துகொண்டவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. முன்னதாக அங்கன்வாடி பணியாளர்கள் அனைவருக்கும் கிராம மக்கள் அனைவருக்கும் தாய்ப்பால் வார விழாவின்  முக்கியத்துவத்தை கொண்டு சேர்ப்பதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர்க, போஷன்பியான் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கேத்தி தொகுதி அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News