ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட கிராமத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய பாஜக
மாநில நிர்வாகிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் காட்டேரி பூங்காவிற்கு இராணுவ தளபதி பிபின் ராவத் பெயர் வைக்க கோரிக்கை.;
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த 8 ம் தேதி ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தின் போது நஞ்சப்ப சத்திரம் கிராம மக்கள் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர். அவர்களுக்கு தமிழக பாஜக சார்பில் விபத்து நடந்த இடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் பாஜக மாநில பொதுசெயலாளர் செல்வகுமார், விவசாய அணி தலைவர் நாகராஜ், மாநில இளைஞரணி துணை தலைவர் முருகானந்தம் ஆகியோர் மலர்வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் ஒரு மாதத்திற்கு தேவையான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் அருகிலுள்ள காட்டேரி பூங்காவிற்கு பிபின் ராவத் பெயர் சூட்ட வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.