4 மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி: நீலகிரியில் கொண்டாட்டம்
பா.ஜ.க வின் இந்த வெற்றி கொண்டாட்டத்தை பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெற்றி கோஷங்களை எழுப்பினர்.;
பஞ்சாப், உத்திர பிரதேசம், உத்ரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. பஞ்சாப்பை தவிர பிற மாநிலங்களில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பாஜகவினர் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
நீலகிரியில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், உள்ளிட்ட பகுதிகளில் பாஜகவினர், இந்த வெற்றி கொண்டாட்டத்தை பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெற்றி கோஷங்களை எழுப்பினர்.