கோத்தகிரி உயிலட்டி சாலையில் கரடி உலா: கிராம மக்கள் பீதி
கோத்தகிரி உயிலட்டி சாலையில் கரடி உலா வருவதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.;
உயிலட்டி கிராம சாலையில் உலா வந்த கரடி.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் வனவிலங்குகள் யானைகள் , சிறுத்தை , கரடி , காட்டெருமை என அதிக அளவில் குடியிருப்புப் பகுதிக்குள் உலா வருகின்றனர்.
தற்போது உயிலட்டி சாலையில் கரடி ஒன்று சுற்றித்திரிந்து வருகிறது. தற்போது இந்த கரடி வீடுகளிலும் உலா வருவதால் இரவு நேரங்களில் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலை உள்ளதால் இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
எனவே கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.