குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடி; கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை
கோத்தகிரி பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி உலா வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை தற்போது அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக பகல் நேரங்களிலே உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாகி உள்ளது.
இந்த நிலையில், கோத்தகிரி அருகே உள்ள கேசலாடா பகுதியில் குப்பைத் தொட்டிக்குள் உணவைத் தேடி கரடி ஒன்று உலா வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.