கோத்தகிரியில் குடியிருப்புக்குள் உலா வந்த கரடி - மக்கள் பீதி
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கரடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதியிலும் தேயிலை தோட்டங்களிலும் உலா வருவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், கோத்தகிரி அருகேயுள்ள அரவேணு குடியிருப்பிற்குள் கரடி ஒன்று உள்ளே புகுந்து உலா வந்தது. பின்னர் அருகேயுள்ள வனபகுதிக்குள் சென்றது. கரடி வந்து சென்ற வீடியோ வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கரடி நடமாட்டத்தால் பீதியில் உள்ள பொதுமக்கள், கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.