குன்னூரில் தீ குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு
குன்னூர் நீதிமன்றத்தின் முன்பு முதியவர் தீ குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரும், இவரது மனைவியும் தங்களுடைய மகன் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வரும் நிலையில் கடந்த 6 மாத காலமாக குடும்ப பிரச்சினை காரணமாக ராஜேந்திரனுக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் வாக்கு வாதங்கள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து சித்திரவதை செய்து வருவதாக தந்தை ராஜேந்திரன் தெரிவித்தார்.
இதன் காரணமாக அவருடைய உயிருக்கு எந்தவொரு பாதுகாப்பு இல்லாத நிலையில் நீதிமன்றத்தின் முன்பு தீ குளிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.