ஓராண்டுக்கு முன்னர் காதலர் தினத்தில் மாணவிக்கு தாலிகட்டிய வாலிபர் கைது
நீலகிரியில் ஓராண்டுக்கு முன்னர் காதலர் தினத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவியுடன் பேசிக் கொண்டிருந்த வாலிபர், அந்த சிறுமிக்கு தாலி கட்டுகிறார், இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், குன்னூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மாணவிக்கு கடந்த 2020 ம் ஆண்டு காதலர் தினத்தன்று நடந்த சம்பவம். இந்த வீடியோவை பெண்ணின் உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக் கோரி அனுப்பப்பட்டது,
அவ்வாறு அனுப்பப்பட்ட வீடியோ எப்படியோ சமூக வளைதலங்களில் வெளியாகியுள்ளது. இவ்வாறு பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய கவுதம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து குழந்தை திருமணம் சட்டத்தின் கீழ் கவுதம் கைது செய்யப்பட்டார்.
ஓராண்டிற்கு முன்பு நடந்த சம்பவத்தின் வீடியோ வெளியானதால் வாலிபர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.