ரூ. 5 கோடி மதிப்பில் குன்னூரில் கழிவுநீர் பரவலாக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம்

குன்னூரில், 5 கோடி ரூபாய் மதிப்பில் பரவலாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-07-06 10:27 GMT

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஆறுகள் மற்றும் ஓடைகளில் கழிவுநீர் அதிகளவில் செல்கின்றன. இதனால், சில குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் வகையில் கழிவுநீர் வடிகால் வாரிய வல்லுநர்கள், குன்னூர் நகரில் உள்ள கழிவுநீரைச் சுத்திகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக, குன்னூர் உள்ள 30 வார்டுகளுக்கு உட்பட்ட 21 ஓடைப்பகுதிகளில், கழிவுநீரை சேகரித்து, அதனை ஆய்வு மேற்கொள்வதற்காக கழிவுநீர் வடிக்கால் வாரிய அதிகாரிகள் எடுத்துச்சென்றனர். இந்த  சோதனை வெற்றி அடைந்த பின்னர், அனைத்து கழிவுநீர் குழாய்களையும் ஒன்றாக இணைத்து, குன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கு அருகில் 5 கோடி ரூபாய் மதிப்பில் பரவலாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News