கஞ்சா விற்க முயன்ற 2 பேர் கைது

Update: 2021-01-23 06:30 GMT

குன்னுாரில் கஞ்சா விற்பனை செய்ய முயன்றதாக இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதனையொட்டி குன்னுார் டி.எஸ்.பி., சுரேஷ் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையில், காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.இந்நிலையில் ரகசிய தகவல் அடிப்படையில், உபதலை பகுதியில் கஞ்சா கொண்டு வந்து விற்பனை செய்த ஜெயந்திநகரை சேர்ந்த பரூக்(22), அஜய் (21) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இருவரும் ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News