குன்னூரில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டம் குன்னூரில் புற்றுநோய் குறித்து, பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-02-06 07:49 GMT

இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஏழு லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழந்து வருகின்றனர். இந்த நோயை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு சார்பாக பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் கட்டமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் இந்திய குடும்பநலச் சங்கம் சார்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மார்பக புற்றுநோய் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் புற்றுநோய் உருவாகுவது குறித்து அறிகுறிகள் ஏதேனும் தெரியவரும் பட்சத்தில் உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News