மலை ரயிலில் பயணம் செய்ய கெடுபிடி

குன்னூரிலிருந்து உதகை செல்லும் மலை ரயிலில் 30 பயணிகள் மட்டுமே பயணம் பொது பயணச் சீட்டு முறையை அமல்படுத்த கோரிக்கை.;

Update: 2021-02-04 16:55 GMT

கொரோனா பாதிப்பால் நிறுத்தி வைக்கப்பட்ட நீலகிரி மலை ரயில் சேவை கடந்த ஜனவரி மாதம் முதல் இயக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மலை ரயிலில் பயணம் மேற்கொள்வதற்கு முன் பதிவு முறை அவசியம் என்று தென்னக ரயில்வே துறை அறிவித்தது . இதனால் சுற்றுலா பயணிகள் இணையதளம் வாயிலாக பயணச்சீட்டு முன்பதிவு செய்து வருகின்றனர் இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமே இதில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர் . இந்நிலையில் குன்னூர் உதகை இடையே 5 பெட்டிகளுடன் இயக்கப்படும் மலை ரயிலில் சராசரி கட்டணம் 50 ரூபாய் இருந்தபோது 175 பயணிகளுக்கு மேல் பயணம் மேற்கொண்டு வந்தனர் .

ஆனால் தற்போது முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வதால் அதிகபட்சமாக நபருக்கு 150 ரூபாய் வசூலித்து வருகின்றனர் இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்வதை தவிர்த்து வேறு வாகனங்களைத் தேடி செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று மலை ரயிலில் 30 பேர் மட்டுமே பயணம் மேற்கொண்டனர். எனவே இனிவரும் காலங்களில் முன்பதிவு முறை இருந்தாலும் பொது பயணச்சீட்டுகள் முறைகளையும் ரயில்வே துறையினர் அமல்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News