குன்னுாரில் களை கட்டிய பழ சீசன்

Update: 2020-12-29 06:45 GMT

குன்னுார் மற்றும் பர்லியார் பகுதியில் ஸ்பெயின் பிளம்ஸ் சீசன் களை கட்டியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், பேரி, பிளம்ஸ், சீதா, மங்குஸ்தான், ஸ்ட்ராபெர்ரி, துரியன் உட்பட பல்வேறு மருத்துவ குணம் வாய்ந்த பழங்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. இதில், பொதுவாக நீலகிரியில் ரூபி பிளம்ஸ் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. சுமார் 5 கிராம் இருக்கும் இந்த பழங்கள் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சீசன் காலமாக உள்ளது.தற்போது பிளம்ஸ் சீசன் இல்லாத நிலையில், தற்போது, ஸ்பெயின் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளம்ஸ்கள் குன்னுார்,மற்றும் பர்லியார் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது

ஸ்பெயின் நாட்டின் இந்த வகை பிளம்ஸ் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.அதிக இனிப்பு சுவை கொண்ட இந்த பழங்கள் தற்போது கிலோ ரூ.200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த வகை பிளம்ஸ் நாற்றுக்களை நீலகிரியில் வளர்க்க தோட்டக்கலை துறையினர் முன்வர வேண்டுமென விவசாயிகள், வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News