புதிய தலைமை செயலாளராக முருகானந்தம் நியமனம்..!
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்
புதிய தலைமை செயலாளராக முருகானந்தம் நியமனம்..!
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 50வது தலைமைச் செயலாளர் ஆவார். ஏற்கெனவே தலைமைச் செயலாளராக இருந்த சிவதாஸ் மீனா வேறு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முருகானந்தம் நிதித் துறை செயலாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலாளராக இருந்தவர் முருகானந்தம். இவரை தலைமைச் செயலாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முருகானந்தம்?
முருகானந்தம் 1969 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். 1991 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் துறையில் பி.டெக் முடித்தார், மேலும் 1994 ஆம் ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் முதுகலை பட்டம் பெற்றார்.
இவர் 1991-ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். தமிழக அரசின் பல முக்கிய பொறுப்புகளை இவர் வகித்திருக்கிறார். கடந்த அதிமுக ஆட்சியில் தொழிற்துறையின் முதன்மைச் செயலாளராக இவர் பொறுப்பு வகித்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முருகானந்தம் ஐஏஎஸ் நிதித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிதித்துறையில் அனுபவம் மிக்கவர்களையே பொதுவாக இந்தப் பொறுப்பில் அமர்த்துவார்கள். ஆனால், நிதித்துறையில் பெரிய அளவில் அனுபவம் இல்லாத முருகானந்தம் ஐஏஎஸ்ஸுக்கு இந்த பொறுப்பு கொடுத்தது விமர்சனத்துக்கு உள்ளானது.