தேனி அருகே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை வளையத்தில் இஸ்லாமிய அமைப்பு நிர்வாகி

NIA News -தேனி மாவட்டம் கம்பத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் முஸ்லிம் அமைப்பின் முக்கிய நிர்வாகியிடம் விசாரணை நடந்தது.

Update: 2022-09-22 05:19 GMT

பைல் படம்.

NIA News -இந்தியாவில் மாற்று மதத்தினருக்கு எதிராக செயல்படவும், மாற்று மத நிர்வாகிகளை அச்சுறுத்தவும், பொது அமைதியை சீர்குலைக்கவும், மதமாற்றத்திற்கும் பயன்படுத்தவும் சதி வேலைகள் நடப்பதாக உளவுப்பிரிவுகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானாவில் தேசிய பாதுகாப்பு முகமையினர் கடந்த மாதம் சோதனை நடத்தினர்.

அங்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், இன்று அதிகாலை 3.30 மணி முதல் தேனி, திண்டுக்கல், மதுரை, நெல்லை, தென்காசி உட்பட 11 தென் மாவட்டங்களில் பல பள்ளிகள், மசூதிகள் முஸ்லிம் அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். தேசிய பாதுகாப்பு முகையினை சேர்ந்த (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் தேனி முத்துதேவன்பட்டியில் உள்ள அறிவகம் பள்ளியிலும், கம்பத்தை சேர்ந்த முஸ்லிம் அமைப்பின் முக்கிய நிர்வாகி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்களி்ன் விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால் அந்த முக்கிய நிர்வாகி போலீஸ் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News