நாமக்கல்லில் நாளை ( 27ம் தேதி) இளைஞர் திறன் திருவிழா
Youth Skill Day - நாமக்கல்லில் நாளை ( 27ம் தேதி) இளைஞர் திறன் திருவிழா நடைபெறுகிறது.;
நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங்.
Youth Skill Day -நாமக்கல்லில் நாளை ( 27ம் தேதி) இளைஞர் திறன் திருவிழா நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ் புதுச்சத்திரம் வட்டாரத்தை சேர்ந்த 18 வயது முதல் 45 வரையுள்ள ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு அரசு துறைகளின் கீழ் தீனதயாள் உபத்யாய கிராமின் கௌசல் யோஜனா (DDUGKY) ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (RSETI), தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC), பிரதம மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா (PMKVY), மாவட்ட தொழில் மையம் (DIC) மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு கழகம் (TAHDCO) போன்ற திட்டங்களில் தையல், அலங்கார ஆடை வடிவமைப்பு, அழகுக் கலை, ஓட்டுநர் உதவி செவிலியர், நான்கு சக்கர வாகனம் பழுது நீக்குதல், கணினி, சில்லறை விற்பனை வணிகம், BPO, துரித உணவு தயாரித்தல், கைபேசி பழுது நீக்குதல் போன்ற இலவச திறன் பயிற்சிகள் வழங்கி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு / சுய தொழில் செய்வதற்கு ஏதுவாக இலவச திறன் பயிற்சிகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் பொருட்டு இளைஞர் திறன் திருவிழா நாளை (27ம் தேதி) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை ஞானமணி பொறியியல் கல்லூரி வளாகம், புதுச்சத்திரம், A.K.சமுத்திரத்தில் நடைபெறவுள்ளது.
எனவே, முகாமில் புதுச்சத்திரம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் இருபாலரும் கலந்து கொண்டு பொருத்தமான பயிற்சியினை தேர்வு செய்து பயிற்சி பெற்றிட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2