நகைக்கடன் தள்ளுபடி பெறாதவர்கள் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நகைக்கடன் தள்ளுபடி பெறாதவர்கள் வரும் 12ம் தேதிக்குள் மேல் முறையீடு செய்யலாம் என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன் தகவல்

Update: 2022-05-08 05:45 GMT

மாதிரி படம் 

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழக அரசு கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் நகைக்கு உட்பட்டு பெறப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானோரின் பெயர் பட்டியல் கடந்த மாதம் 12-ந் தேதி இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தள்ளுபடி பட்டியலில் இடம்பெறாதோர் அதற்குரிய முறையீட்டை தகுதியானோர் பெயர் பட்டியல் வெளியான ஒரு மாத காலத்திற்குள், நாமக்கல் மண்டல இணைப்பதிவாளர், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு சரக துணை பதிவாளரிடம் எழுத்துப்பூர்வமாக தகுந்த ஆதாரங்களுடன் மேல்முறையீடு செய்து தீர்வு காணலாம்.

வருகிற 12ந் தேதி வரை பெறப்படும் மேல்முறையீடுகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் பெறப்படும் மனுக்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News