குமாரபாளையம் அரசு கல்லூரியில் நாற்பெரும் விழா
குமாரபாளையம் அரசு கல்லூரியில் கல்வி, விளையாட்டு, கலாசாரம் கலந்து மாணவர்களின் சாதனைகளை கொண்டாடிய விழா;
அரசு கல்லூரியில் நாற்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் விழா, கல்லூரி ஆண்டு விழா, கல்லூரி பேரவை நிறைவு விழா, விளையாட்டு விழா ஆகிய நாற்பெரும் விழா கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காங்கேயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் நசீம் ஜான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். அவர் தமது உரையில், "மாணவ மாணவியர் பயிலும் கல்வி வெறும் ஏட்டுக்கல்வியாக இருக்கக் கூடாது. ஆக்கப்பூர்வமாக, தனக்கும் தன்னை சார்ந்தோருக்கும் மட்டுமின்றி, சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும். மாணவர்கள் சமூக சேவைகளிலும் ஈடுபட வேண்டும்" என வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு கலை கல்லூரி இணை பேராசிரியர் சந்திரசேகரன், பேராசிரியர்கள் ரகுபதி, பத்மாவதி, சரவணாதேவி, ரமேஷ், மகாலிங்கம், மனோஜ், உடற்கல்வி இயக்குனர் பிரியா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.