நாமக்கல் மாவட்டத்தில் இன்று 460 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் 460 மையங்களில் இன்று நடைபெறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 58,000 பேருக்கு செலுத்த ஏற்பாடு;
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில், இன்று 3ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மொத்தம் 460 மையங்களில் 58,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 3ம் தேதி மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் பகுதிகள்:
நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் நாமகிரிப்பேட்டை ஒன்றியம், நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி ஆகிய டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் 29 நிலையான மையங்களிலும், 1 நடமாடும் மையத்திலும் கொரோனா தடுப்பூசி போடப்படும்.
கொல்லிமலை வட்டாரத்தில் 26 நிலையான மையங்கள் மற்றும் 1 நடமாடு மையத்தில் தடுப்பூசி செலுத்தப்படும்.
சேந்தமங்கலம் வட்டாரத்தில் சேந்தமங்கலம் ஒன்றியம், சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் 17 நிலையான மையங்கள் மற்று ஒரு நடமாடும் மையத்தில் தடுப்பூசி போடப்படும்.
எருமப்பட்டி வட்டாரத்தில் எருமப்பட்டி ஒன்றியம் மற்றும் எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் 28 நிலையான மையங்கள் மற்றும் 1 நடமாடும் மையத்தில் தடுப்பூசி செலுத்தப்படும்.
மோகனூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மோகனூர் டவுன் பஞ்சாயத்து பகுதியில் 18 நிலையான மையங்கள் மற்றும் 1 நடமாடும் மையத்தில் தடுப்பூசி போடப்படும்.
நாமக்கல் ஊராட்சி ஒன்றியப்பகுதியில் 17நிலையான மையங்கள் மற்றும் 1 நடமாடும் மையத்திலும், நகராட்சிப் பகுதியில் 21 நிலையான மையங்கள் மற்றும் 1 நடமாடும் மையத்திலும் தடுப்பூசி செலுத்தப்படும்.
பரமத்தி ஊராட்சி ஒன்றியம், பரமத்தி, வேலூர் டவுன் பஞ்சாயத்து பகுதியில் 23 நிலையான மையங்கள் மற்றும் 1 நடமாடும் மையத்தில் தடுப்பூசி போடப்படும்.
கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், பொத்தனூர், வெங்கரை, பாண்டமங்கலம் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் 23 நிலையான மையங்கள் மற்றும் 1 நடமாடும் மையத்தின் மூலம் தடுப்பூசி செலுத்தப்படும்.
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சிப் பகுதியில் 37 நிலையான மையங்கள் மற்றும் 2 நடமாடும் மையங்கள் மூலம் தடுப்பூசி போடப்படும்.
பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பள்ளிபாளையம் நகராட்சி, குமாரபாளையம் நகராட்சி, ஆலாம்பாளையம், படவீடு டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் 41 நிலையான மையங்கள் மற்றும் 2 நடமாடும் மையங்கள் மூலம் த டுப்பூசி செலுத்தப்படும்.
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், வெண்ணந்தூர், அத்தனூர் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் 24 நிலையான மையங்கள் மற்றும் 1 நடமாடும் மையத்தில் தடுப்பூசி போடப்படும்.
இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், இராசிபுரம் நகராட்சி, பிள்ளாநல்லூர், பட்டணம் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் 44 நிலையான மையங்கள் மற்றும் 2 நடமாடும் மையங்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படும்.
புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் 27 நிலையான மையங்கள் மற்றும் 1 நடமாடும் மையம்,
எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியப்பகுதியில் 36 நிலையான மையங்கள் மற்றும் 1 நடமாடும் மையம்,
மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 24 நிலையான மையம் மற்றும் 1 நடமாடும் மையம், மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில் 4 நிலையான மையங்கள்.
மாவட்டத்தில், மொத்தம் 460 மையங்களில் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும் மெகா கொரோன தடுப்பூசி முகாம்களில் 58 ஆயிரம் பேருக்கு, முதல் மற்றும் இரண்டாம் தவணை கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி போடுவதற்கு பொது சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.