கொல்லிமலை அருவிகளில் குளிப்பதற்கு தடை, மீறினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்

கொரோனா ஊடங்கு காரணமாக, கொல்லிமலையில் உள்ள அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி குளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.

Update: 2021-07-22 11:15 GMT

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளாதவது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான கொல்லிமலையில் தற்போது குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது

இதனால் விடுமுறை நாட்களில் பல்வேறு மாநில, மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கொல்லிமலைக்கு வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் அங்குள்ள ஆகாய கங்கை, நம் அருவி, மாசிலா அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆ

காய கங்கைக்குச் செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் தடையை மீறி குளிப்பதாக வந்த தகவலையடுத்து, முக்கிய அருவிகளில் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.

சுற்றுலாப்பயணிகள் அருவிகளைப் பார்வையிடுவதற்கு மட்டுமே அனுமதி உண்டு. விதிகளை மீறி அருவிகளில் குளிக்கச் செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News