தேசிய கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் நாமக்கல் மாணவி வெள்ளிப் பதக்கம்
தேசிய அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் நாமக்கல் அரசுப்பள்ளி மாணவி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தேசிய அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்ணந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி வெள்ளிப்பதக்கம் வென்று மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
அகில இந்திய கேரம் கூட்டமைப்பு (AICF) நடத்திய 49 வது தேசிய சீனியர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மார்ச் 30 முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை வரை மகாராஷ்டிர மாநிலம் தாதர் நகரில் நடைபெற்றது.
இதில் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி செ.பிரீத்தா பிரின்சி, தமிழ்நாடு அணிக்காக பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவியை, நாமக்கல் மாவட்ட கேரம் கழக கௌரவத் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை, தலைவர் ஓம் சரவணா மற்றும் செயலர் தியாகராஜன் ஆகியோர் பாராட்டினார்கள்.
நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த கேரம் மாணவிக்கு தலைவர் ஓம் சரவணா, புதிய கேரம் போர்டு ஒன்றை பரிசாக அளித்து பாராட்டினார்.