நாமக்கல்லில் டாக்டர் உள்பட 5 பேருக்கு கொரோனா, பரிசோதனைக் கூடம் மூடல்

நாமக்கல்லில் கொரோனா பரிசோதனைக் கூடததில் பணியாற்றி டாக்டர் உள்பட 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையொட்டி ஆய்வகம் மூடப்பட்டது.

Update: 2021-05-10 14:00 GMT

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்தாண்டு மே மாதம் கொரோனா தொற்று கண்டறியும் ஆர்.டி. பி. சி. ஆர். ஆய்வகம் தொடங்கப்பட்டது. தினசரி சுமார் 1500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சளி மாதிரிகள் இங்கு பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் கொரோனா பரிசோதனை ஆய்வகத்தில் பணியாற்றி வரும் டாக்டர் மற்றும் ஆய்வக தொழில்நுட்பவியலாளர் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து ஆய்வகம் அதிரடியாக மூடப்பட்டது. அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆய்வகம் மூடப்பட்ட நிலையில் மாவட்டம் முழுவதும் எடுக்கப்படும் சளி மாதிரிகள், கோவை மாவட்ட சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைத்து, பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் பெறப்படுவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Tags:    

Similar News