குரூப் 2 போட்டித்தேர்வுக்கு 8.30 மணிக்குள் மையத்திற்கு வரவேண்டும்

நாமக்கல்லில் நாளை நடைபெறும் குரூப் 2 போட்டித் தேர்வுக்கு தேர்வர்கள் 8.30 மணிக்குள் மையத்திற்கு வரவேண்டும் என கலெக்டர் அறிவிப்பு;

Update: 2022-05-20 00:15 GMT

ஸ்ரேயாசிங், நாமக்கல் கலெக்டர்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலவலகத்தில், நாளை 21ம் தேதி நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் - 2, குரூப் - 2ஏ போட்டித்தேர்விற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசுகையில், :

நாமக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் - 2, குரூப் - 2ஏ பணியிடங்களுக்கான போட்டித்தேர்வினை 31,854 தேர்வர்கள் எழுத உள்ளனர். அறை ஒன்றுக்கு 20 தேர்வர்கள் வீதம் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக நாமக்கல் மாவட்டத்தில் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

நாமக்கல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 50 தேர்வு மையங்களில் 15,357 தேர்வர்களும், ராசிபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 29 தேர்வு மையங்களில் 8,574 தேர்வர்களும், திருச்செங்கோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 26 தேர்வு மையங்களில் 7,923 தேர்வர்களும் போட்டித்தேர்வினை எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்வு காலை 9.30 க்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெறும். தேர்வுகளை எழுதும் தேர்வர்கள், தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்கே தவறாமல் வந்து விடவேண்டும். தேர்வர்களின் புகைப்படம், பெயர், பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். 9.00 மணிக்கு தேர்வு மைய கதவுகள் பூட்டப்படும் என்பதால் அதற்கு முன் வரும் தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

கண்காணிப்பு பணிகளில், 20 தேர்வர்களுக்கு ஒரு அறை கண்காணிப்பாளரும், 105 தேர்வு மையங்களில் தலா ஒரு முதன்மை கண்காணிப்பாளர்களும், தேர்வு மையத்திற்கு தலா 2 ஆய்வு அலுவலர்கள் என 210 ஆய்வு அலுவலகர்களும், துணை ஆட்சியர்  நிலையிலான அலுவலர்கள் கொண்ட 11 பறக்கும் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள்  நிலை அலுவலர்கள் கொண்ட 30 நடமாடும் குழுவினர் வினாத்தாள்கள் உள்ளிட்ட தேர்வு பணி பொருட்களை தேர்வுமையங்களுக்கு கொண்டு செல்லுதல் மற்றும் விடைத்தாள்களை பெற்று வருதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள உள்ளார்கள்.

தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் செல்ல வசதியாக அனைத்து தேர்வு மையங்களிலும் அரசு பேருந்துகள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சரியாக மேற்கொண்டு, சிறப்பாக பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் டிஆர்ஓ கதிரேசன், டி.என்.பி.எஸ்.சி பிரிவு அலுவலர் பாண்டியன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News