நாமக்கல்லில் ஒரே நாளில் 8,584 பேருக்கு தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற 20ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 8,584 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Update: 2022-01-30 00:45 GMT

காட்சி படம் 

நாமக்கல் மாவட்டத்தில், 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 14,64,300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி (83.49 சதவீதம்) 12,22,501 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 2,41,799 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது.

இரண்டாம் தவணை தடுப்பூசி (57.52சதவீதம்) 8,42,291 நபர்களுக்கு போடப்பட்டுள்ளது. இன்னும் 2,72,850 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டியுள்ளது.

இந்த நிலையில் 20ம் கட்டமாக அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்துமையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள மொத்தம் 478 முகாம்களில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா நோய் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் மொத்தம் 8,584 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News