நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் பதிவான வாக்குகள் முழு விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 76.86 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது;

Update: 2022-02-20 02:00 GMT

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 19 பேரூராட்சிக்களில் உள்ள 439 வார்டுகளுக்கு தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 439 வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,748 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நகராட்சிகள்:

நாமக்கல் நகராட்சியில் மொத்தம் வாக்காளர்கள் 95,438 பேர். இவர்களில் 31,946 ஆண்கள், 35,413 பெண்கள், 11 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 67,370 பேர் (70.59 சதவீதம்) வாக்களித்துள்ளனர்.

குமாரபாளையம் நகராட்சியில் மொத்த வாக்காளர்கள் 67,464 பேர்.இவர்களில் ஆண்கள் 24,764 பேர்,பெண்கள் 26,570, மூன்றாம் பாலினத்தவர் 4 என மொத்தம் 51,338 பேர் (76.10 சதவீதம்) வாக்களித்துள்ளனர்.

பள்ளிபாளையம் நகராட்சியில் மொத்த வாக்காளர்கள் 37,806 பேர். இவர்களில் ஆண்கள் 13,895 பேர், பெண்கள் 14,609 பேர் என மொத்தம் 28,504 பேர் (75.39 சதவீதம்) வாக்களித்துள்ளனர்.

ராசிபுரத்தில் மொத்த வாக்காளர்கள் 40,960 பேர். இவர்களில் ஆண்கள் 15,302 பேர், பெண்கள் 16.062 பேர் என மொத்தம் 31,094 பேர் (75.91 சதவீதம்) வாக்களித்துள்ளனர்.

திருச்செங்கோடு நகராட்சியில் மொத்த வாக்காளர்கள்79,889 பேர். இவர்களில் ஆண்கள் 29,034, பெண்கள் 30,707, மூன்றாம் பாலினத்தவர்4 பேர் என மொத்தம் 59,745பேர் (74.79 சதவீதம்) வாக்களித்துள்ளனர்.

5 நகராட்சியிலும் மொத்தம் 3,21,559 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2,38,052 பேர் (74.03 சதவீதம்) வாக்களித்துள்ளனர்.

பேரூராட்சிகள்:

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 19 பேரூராட்சிகளில் மொத்தம் 2,29,325 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆலாம்பாளயைம் பேரூராட்சியில் மொத்த வாக்குகள் 20,291, பதிவான வாக்குகள் 15,216 (74.99 சதவீதம்).

அத்தனூர் மொத்த வாக்காளர்கள் 8,310, பதிவான வாக்குகள்7,398 (86.02 சதவீதம்).

எருமப்பட்டி மொத்த வாக்காளர்கள் 9,767, பதிவான வாக்குகள் 7,398 (75.74 சதவீதம்).

காளப்பநாய்க்கன்பட்டி மொத்த வாக்காளர்கள் 9,070, பதிவான வாக்குகள் 7,559 (83.34 சதவீதம்).

மல்லசமுத்திரம் மொத்த வாக்காளர்கள் 16,396, பதிவான வாக்குகள்13,099 (79.89 சதவீதம்).

மோகனூர் மொத்த வாக்காளர்கள் 12,212, பதிவான வாக்குகள் 9,645 (78.98 சதவீதம்).

நாமகிரிப்பேட்டை மொத்த வாக்காளர்கள் 19,133, பதிவான வாக்குகள் 15,420 (80.59 சதவீதம்).

படைவீடு மொத்த வாக்காளர்கள் 9,409, பதிவான வாக்குகள் 7,430 (78.97 சதவீதம்).

பாண்டமங்கலம் மொத்த வாக்காளர்கள் 4,716, பதிவான வாக்குகள் 3,961 (83.99 சதவீதம்).

பரமத்தி மொத்த வாக்காளர்கள் 8,506, பதிவான வாக்குகள் 6,891 (81.01 சதவீதம்).

பட்டணம் மொத்த வாக்காளர்கள் 7,350, பதிவான வாக்குகள் 6,335 (86.19 சதவீதம்).

பிள்ளாநல்லூர் மொத்த வாக்காளர்கள் 9,478, பதிவான வாக்குகள் 8,149 (85.98 சதவீதம்).

பொத்தனூர் மொத்த வாக்காளர்கள் 16,237, பதிவான வாக்குகள் 12,610 (77.66 சதவீதம்).

ஆர்.புதுப்பட்டி மொத்த வாக்காளர்கள் 6,103, பதிவான வாக்குகள் 5,317 (87.12 சதவீதம்).

சீராப்பள்ளி மொத்த வாக்காளர்கள் 11,273, பதிவான வாக்குகள் 9,316 (82.64 சதவீதம்).

சேந்தமங்கலம் மொத்த வாக்காளர்கள் 18,220, பதிவான வாக்குகள் 14,708 (80.72 சதவீதம்).

ப.வேலூர் மொத்த வாக்காளர்கள் 21,874, பதிவான வாக்குகள் 16,802 (76.81 சதவீதம்).

வெங்கரை மொத்த வாக்காளர்கள் 8,350, பதிவான வாக்குகள் 7,286 (87.26 சதவீதம்).

வெண்ணந்தூர் பேரூராட்சி மொத்த வாக்காளர்கள் 12.630, பதிவான வாக்குகள் 11,067 (87.62 சதவீதம்).

மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிக்களில் மொத்தம் 2,29,325 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,85,357 பேர் (80.83 சதவீதம்) வாக்களித்துள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 19 பேரூராட்சிக்களை சேர்த்து மொத்தம் 5,50,884 வாக்காõளர்கள் உள்ளனர். இவர்களில் 4,23,498 பேர் வாக்களித்துள்ளனர். மாவட்டத்தின் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவீதம் 76.86 ஆகும்.

Tags:    

Similar News