நாமக்கல்: ஒரு கோடி ரூபாய்க்கு பருத்தி ஏலம்
நாமக்கல்லில் ஒரு கோடி ரூபாய்க்கு 4300 பருத்தி மூட்டைகள் ஏலம், விவசாயிகள் மகிழ்ச்சி.
நாமக்கல்லில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தோறும் செவ்வாய் கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஏலத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம், துறையூர் முசிறி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனை கொண்டு வந்திருந்தனர். இந்த ஏலத்தில் ஆர்.சி.எச் ரகம் குவிண்டாலுக்கு ரூ.5390 முதல் ரூ.6869 வரையிலும், டி.சி.எச் ரகம் ரகம் குவிண்டால் ரூ.7352 முதல் ரூ.8762 வரையிலும் ஏலத்திற்கு விடப்பட்டது. இந்த ஏலத்தில் 4300 பருத்தி மூட்டைகள் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.