மோகனூர் இளைஞர் கொலை வழக்கில் மூவர் கைது
மோகனூர் அருகே வாலிபரை கழுத்து அறுத்து கொலை செய்த மூன்று பேர் அதிரடி கைது.;
நாமக்கல் மாவட்டம் மோகனுார் அடுத்த ஒருவந்தூரை சேர்ந்த முருகேசன் மகன் சசிகுமார்(24). கடந்த, ஒன்றாம் தேதி புத்தாண்டு அன்று இரவு மோகனுார் ரயில்வே மேம்பாலத்தின் அருகே சசிகுமாரை பேசி வரவழைத்தனர். நண்பர்களான மலர்மன்னன், ரஞ்சித், பிரகாஷ் மூவரும் சேர்ந்து, பீர் பாட்டிலால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் சசிகுமாரை கொலை செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, மோகனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர், தலைமறைவான மூன்று பேரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில், மோகனூர் போலீசார் வாங்கல் பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மலர்மன்னன், ரஞ்சித் மற்றும் பிரகாஷ் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சசிக்குமார் மற்றும் கைது செய்யப்பட்ட மலர்மன்னன், ரஞ்சித்,பிரகாஷ் ஆகியோர் ஒன்றாக காவிரி ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி விற்பனை செய்து வந்துள்ளனர். இதில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதால் கொலை செய்தது தெரியவந்தது.