நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய மழை
வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் நிலையில், நாமக்கல்லில் வெளுத்து வாங்கியது.;
வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை முதல் நாமக்கல், சேந்தமங்கலம், புதுசத்திரம், எருமப்பட்டி, மோகனூர், ராசிபுரம், மங்களபுரம், கொல்லிமலை, புதன்சந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சோளம், பருத்தி, பாசிப்பயறு, மக்காசோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகளும் சிரமமடைந்தனர்.