தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லுாரிகள் வழங்கிய மோடி..!
பிரதமர் மோடி தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
இரண்டே வருடங்களிலே 11 மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளித்து பணம் ஒதுக்கி கட்டிக்கொடுத்தார். அவ்வளவும் அரசு மருத்துவ கல்லூரிகள். மொத்தம் 11 கல்லுாரிகளிலும் சேர்ந்து ஆண்டுதோறும் புதியதாக 1450 மாணவர்கள் கூடுதலாக மருத்துவ படிப்பு படிக்க முடியும்.
இதற்கு மத்திய அரசு கொடுத்த நிதி 2145 கோடி ரூபாய். மாநில அரசு 1935 கோடி மட்டுமே வழங்கியது. அதுவும் அரியலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நீலகிரி, விருதுநகர் ஆகிய நகரங்களிலே இருக்கும் மருத்துவகல்லூரிகளிலே ஆண்டுதோறும் புதியதாக 150 மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம்.
நாமக்கல், ராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளூர் ஆகிய நகரங்களிலே இருக்கும் மருத்துவகல்லூரிகளிலே ஆண்டுதோறும் 100 மாணவர்களும் படிக்கலாம். நாட்டிலே அதிகளவாக மருத்துவ கல்லூரிகள் கட்டித்தரப்பட்டது தமிழ்நாட்டிலே தான். இந்த 11 மருத்துவ கல்லூரிகள் இல்லாவிடில் 1450 மாணவர்கள் இடஒதுக்கீடு மூலம் படிப்பது கிடைத்திருக்காது.
இதனையெல்லாம் விட சிறப்பு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளதும் பிரதமரின் குறிப்பிடத்தக்க சாதனை. இந்த கல்லுாரி தற்போது செயல்பட்டு வரும் நிலையில், பல ஆயிரம் கோடி செலவில் இதற்கான கட்டட கட்டுமான பணிகளும் நடந்து வருகின்றன.