அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம்: அமைச்சர் சுப்பிரமணியன் அடிக்கல்
புதுக்கோட்டை மாவட்டத்தில், திருமயம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளன;
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள, அவசர கால விபத்து பகுதி கட்டடப் பணிக்கும், அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில், ரூ.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள, மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடப் பணிக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற விழாவில், ,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர்(19.06.2023) அடிக்கல் நாட்டி, தாய்மார்களுக்கு குழந்தை நல பரிசு பெட்டகத்தினை வழங்கினார்கள்.
அமைச்ச மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவத்துறையில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறார்கள். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில், திருமயம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அவசர கால விபத்து பகுதி கட்டடப் பணிக்கும், அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் ரூ.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடப் பணிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் கட்டப்படவுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையானது, 7 தளங்களுடன் ஸ்கேன் வசதி, எக்ஸ்ரே வசதி, படுக்கை அறைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு, அலுவலக அறை, மருந்தகம், படுக்கை சிறப்பு வார்டு, இரத்த வங்கி, டையாலிசிஸ் அறை, எண்டோஸ்கோபி, அவசர வார்டு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் சிறப்புடன் அமையப்பெற உள்ளது. இதன்மூலம் திருமயம் மற்றும் அறந்தாங்கி பகுதியில் உள்ள மக்கள் தங்களது இல்லங்களுக்கு அருகிலேயே மருத்துவ சிகிச்சை பெற முடியும்.
எனவே பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் இதுபோன்ற திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா , இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி , அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் , இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் டாக்டர்.ஏ.சண்முககனி , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.உதயம் சண்முகம், அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர் ஆனந்த், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், நகர்மன்ற துணைத் தலைவர் .தி.முத்து (எ) சுப்ரமணியன், செயற் பொறியாளர் (பொ.ப.து.) வெ.சுகுமாரன், ஒன்றியக்குழு உறுப்பினர்.அழகு (எ) சிதம்பரம், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்;