அமைச்சர் - ப.சிதம்பரம் மோதல்..! பழைய பகைதான் காரணமா?

ராஜகண்ணப்பனோடு சிதம்பரம் மோதுவதற்கு காரணம் என்ன என புதிய தகவல் கிளம்பி உள்ளது.;

Update: 2024-07-05 05:46 GMT

பி.சிதம்பரம் 

“இப்படி ஓர் அரசு மருத்துவமனையா?” என்று மதுரை காசநோய் மருத்துவமனையைப் புகழ்ந்து ட்வீட் செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அடுத்த சில நாள்களிலேயே, “தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய இலவச சைக்கிள்களில் தரம் இல்லை என புகார் எழுந்திருக்கிறது. இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ட்வீட் போட்டு ஆளும் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்.

தமிழ்நாடு அரசு மீது அவருக்கு அப்படியென்ன கோபம் என்று விசாரித்தால், “இது ஆளும் தரப்பு மீதான விமர்சனம் இல்லை. அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதான கடுப்பு. ஒரு விவகாரத்தில் உதவி கேட்டு, ராஜகண்ணப்பன் தரப்பை அணுகியதாம் சிதம்பரம் தரப்பு.

ஆனால், இந்த விவகாரத்தைச் சட்டமன்றத்தில் அனைவர் முன்னிலையிலும் போட்டுடைத்து விட்டார் ராஜகண்ணப்பன். அந்தக் கடுப்பில் தான், சைக்கிள் விவகாரத்தை வைத்து அட்டாக் செய்திருக்கிறார் சிதம்பரம்” என்கிறார்கள் அமைச்சர் தரப்பில்.

“அரசுப் பள்ளிகளுக்கு சைக்கிள்களைக் கொள்முதல் செய்வது பள்ளிக்கல்வித்துறையல்ல. கண்ணப்பனின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தான்” என்றும் விளக்கம் கொடுக்கிறார்கள்.

Tags:    

Similar News