மேட்டூர்அணையில் இருந்து 20,000 கனஅடி நீர் திறப்பு: கரையோர மக்களே உஷார்

மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 20,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-11-09 01:30 GMT
மேட்டூர்அணையில் இருந்து 20,000 கனஅடி நீர் திறப்பு: கரையோர மக்களே உஷார்

கோப்பு படம்

  • whatsapp icon

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணையானது இன்று அதிகாலை 5 மணியளவில் 119 அடியை எட்டியது.  இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து முதற்கட்டமாக, காலை 5 மணிக்கு,  விநாடிக்கு 5,000 கன அடி வீதம் திறக்கப்பட்டது.

இதையடுத்து இன்று காலை 5.30 மணிக்கு 10,000 கன அடி வீதமும்,  6  மணிக்கு 15,000 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 6.30 மணியில் இருந்து  விநாடிக்கு 20,000 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு நீர்வள ஆதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News