மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12400 கன அடியாக குறைந்தது

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி, 12400 கன அடியாக குறைந்துள்ளது.

Update: 2021-12-13 02:45 GMT

மேட்டூர் அணை

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம்,  இன்று காலை 8 மணி நிலவரப்படி, 120 அடியாக உள்ளது. நீர்இருப்பு :  93.47 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து,  வினாடிக்கு 12,400 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. 

மேட்டூர் அணையில் இருந்து, உபரிநீர் திறப்பு அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 12,000  அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News